தமிழகத்தில் இ சேவை மையங்கள் மூலமாக அரசு பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி தமிழக அரசின் சார்பில் மட்டுமல்லாமல் இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்கும் வகையில் 50,000 மேற்பட்ட தனி நபர்களுக்கு இணைய சேவை மையங்களை தொடங்க தமிழக அரசு வழி செய்து உள்ளது. இணைய சேவை மையங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சேவைகள் மட்டுமல்லாமல் வேறு பல சேவைகளையும் அளித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.

அவ்வகையில் ரொக்கமாக பணத்தை எடுத்துக் கொள்ளும் ஏடிஎம் மையங்களாகவும் இ சேவை மையங்கள் மாறி வருகின்றன. இ சேவை மையங்களில் பணத்தை எடுத்து அழிப்பதற்கான அனுமதியை வங்கிகள் வழங்குகிறது. அதாவது வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து கைரேகை போன்ற பயோமெட்ரிக் அடையாளத்தை மூலம் ரொக்க பணத்தை இணைய சேவை மையம் நடத்துபவரின் கணக்கு மாற்றிக் கொள்ளலாம். பின்னர் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து எவ்வளவு பணம் எடுக்கப்பட்டது என்பதையும் கணினி திரையில் பார்த்துக் கொள்ள முடியும்.