தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

இதனால் இன்று தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தில் மழை பகுதிகளில் ஓரிரு இடங்கள் என 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதியில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது