தமிழகத்தில் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்களின் வசதிக்காக சொந்த ஊர் செல்ல ஏதுவாக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை காட்டிலும் கூடுதலாக 1612 சிறப்பு பேருந்துகள் கடந்த வருடம் இயக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் 1850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதனைப் போலவே தீபாவளி முடிந்து மக்கள் ஊர்களில் இருந்து சென்னைக்கு வர ஏதுவாக 900 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட நவம்பர் ஒன்பதாம் தேதி 550 பேருந்துகள், நவம்பர் 10 ஆம் தேதி 600 பேருந்துகள் மற்றும் நவம்பர் 11 ஆம் தேதி 700 பேருந்துகள் என மொத்தமாக 1850 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படும். அதனைப் போலவே பண்டிகை முடிந்து ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப நவம்பர் 13, 250 பேருந்துகள், நவம்பர் 14ஆம் தேதி 300 பேருந்துகள் மற்றும் நவம்பர் 15ஆம் தேதி 350 பேருந்துகள் என மொத்தம் 900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.