மோட்டார் வாகனங்களுக்கான திருத்தப்பட்ட வரி குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. காலாண்டு வரி 4900 ரூபாய் ஆக உயர்கிறது. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலும் இருசக்கர வாகனத்திற்கு 375 ரூபாய், இலகு ரக வாகனத்திற்கு 2250 வரை வரி உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு சிறிய ரக லாரி உரிமையாளர்களும் லாரி சார்ந்த தொழில் செய்பவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் சுமார் 25 லட்சம் வாகனங்கள் இன்று ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.