பெரியகுளம் மின் கோட்டம் கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி இன்று (புதன்கிழமை) நடைபெறுவதால் கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், ஆத்தங்கரைபட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகர், வருசநாடு, மயிலாடும்பாறை, பாலூத்து, அருகவெளி குமணன்தொழு, தங்கம்மாள்புரம், சிறைப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது. இதனால் குண்டலப்பட்டி, மல்லி யம்பட்டி, சித்தர்கள் நத்தம், நூத்துலாபுரம், அம்மாபட்டி, சிலுக்கு வார்பட்டி, மைக்கேல் பாளையம், அணைப்பட்டி, சிறு நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்.

இதேபோன்று விருவீடு பகுதியில் விருவீடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே விரு வீடு, விராலி மாயன்பட்டி, நடகோட்டை, ராஜதானி கோட்டை , வடக்கு வலைய ப்பட்டி, தெற்கு வலைய ப்பட்டி, குன்னத்துப்பட்டி, காமாட்சிபுரம்,

சந்தையூர், தாதபட்டி, செக்காபட்டி, ராஜா நகர், மீனான் கன்னிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் மினியோகம் இருக்காது.

தூத்துக்குடியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை தூத்துக்குடி: இனிகோநகர், ரோச்காலனி, சகாயபுரம், மினிசகாயபுரம், மாதா தோட்டம், மத்திய கடற்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு, லயன்ஸ்டவுன், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ்காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரியகடை தெரு, ஜார்ஜ் ரோடு, கணேசபுரம், பாத்திமாநகர், இந்திராநகர், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம் பிராப்பர், சந்தை ரோடு, காந்திநகர், மேலசண்முகபுரம் 2-வது தெரு, மற்றும் அதனை சுற்றி உப்பள பகுதிகள். மின் தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது

கன்னியாகுமரி உபமின் நிலையத்துக்குட்பட்ட மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை ( வியாழக்கிழமை ) நடக்கிறது . எனவே அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கன்னியாகுமரி , கோவளம் , ராஜாவூர் , மைலாடி , வழுக்கம்பாறை , சுசீந்திரம் , சின்ன முட்டம் , கீழமணக்குடி , அழகப்பபுரம் , கொட் டாரம் , சாமிதோப்பு , அஞ்சுகிராமம் , கோழிக் கோட்டுபொத்தை , வாரியூர் , அகஸ்தீஸ்வரம் , மருங்கூர் , தேரூர் , காக்கமூர் , ராமனாதிச்சன்புதூர் , பொத்தையடி , தோப்பூர் , தென்தாமரை குளம் , பால்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்வினியோகம் இருக்காது .