
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் போது மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று சுதந்திர தின விழா விடுமுறையை முன்னிட்டு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறையை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் www.tnstc.in மற்றும் அதன் மொபைல் செயலி மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.