தமிழகத்தில் கல்வியின் வளர்ச்சியின் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் மேற்படிப்பு பயில ஏராளமான தகுதி தேர்வு எழுத வேண்டி உள்ளது. தற்போது மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு தகுதி தேர்வு இருக்கும் நிலையில் இனி வரும் நாட்களில் BA, B.SC உள்ளிட்ட கலை அறிவியல் பாடத்திட்டம் பயில தகுதி தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அதாவது மேற்படிப்பில் சரியான சுரையை தேர்ந்தெடுத்து மேலும் வளர்ச்சி அடைவதற்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக தெரிந்திருக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறிய அவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு நடத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதே சமயம் எந்த துறையாக இருந்தாலும் அறிவை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என அவர் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.