தமிழகத்தில் அரசு, நகராட்சி, மாநகராட்சி, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுடைய அறிவியல் சிந்தனை, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் போன்றவற்ற மேம்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக பள்ளி ஆய்வகங்களை திறன்பட செயல்படுத்த ஆய்வக உதவியாளரின் பணி செயல்முறைகளை சில மாற்றங்கள் கொண்டு வரவும் ,பயிற்சி அளிக்கவும் அரசால் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ஆய்வக உதவியாளர் பணிக்கான புதிய பணி வரையறை அறிவிக்க பள்ளி கல்வி ஆணையர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி வெளியிட்டார். இதில் ஆய்வு உதவியாளர்கள் ஆய்வக பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணியை இவர்கள் சரியாக செய்து முடிக்க அந்த பள்ளி தலைமை ஆசிரியர் உதவி புரியுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல விதிமுறைகளோடு கொண்டு வரப்பட்ட ஆய்வக உதவியாளர் பணிக்கான புதிய பணி வரையறை சில நிர்வாக காரணங்களுக்காக தற்சமயம் ரத்து செய்வதாக பள்ளி கல்வி முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார்.