குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்கு  சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் பிற பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.