
தி.மலையில் 3 நாட்களுக்கு TASMAC கடைகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தீபத் திருவிழாவை முன்னிட்டு தி.மலை, சுற்று வட்டார பகுதிகளில் நவ. 25, 26, 27ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இன்று தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளில் TASMAC கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.