தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தவறாக மொழிபெயர்த்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி நேற்று ராணிப்பேட்டையில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேச, அதனைத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தமிழில் மொழிபெயர்த்தார்.
ராகுல் காந்தி முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கும், செல்வப்பெருந்தகை மொழிபெயர்த்ததற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறித்து ராகுல் பேசிய விவகாரத்தைச் செல்வப்பெருந்தகை முற்றிலும் மாற்றிக் கூறினார். அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய விவகாரம் குறித்து ராகுல் காந்தி விரிவாகப் பேசியபோதும், செல்வப்பெருந்தகை அதனைப் பொதுவான அரசியல் வசனங்களாகவே மொழிபெயர்த்தார்.
ஏற்கனவே கடந்த காலங்களில் ராகுல் காந்தி தமிழகம் வந்தபோது, அவரது பேச்சை மொழிபெயர்த்த காங்கிரஸ் நிர்வாகிகள் செய்த தவறுகள் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. தற்போது அதேபோன்றதொரு சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளது, எதிர்க்கட்சிகளிடையே விமர்சனப் பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் ராகுல் பேசியதும் செல்பெருந்தகை பொழிபெயர்த்ததும் பற்றி தற்போது பார்ப்போம்.
| ராகுல் காந்தி பேசியது (ஆங்கிலம்) | உண்மையான அர்த்தம் | செல்வப்பெருந்தகை மொழிபெயர்த்தது |
| Modi is controlled by United States. | பிரதமர் மோடியை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது. | நாம் எல்லாம் ஒருங்கிணைந்த இந்தியாவாகப் பார்க்கிறோம். |
| Yesterday PM Modi face completely Lacking Confidence. | நேற்று பிரதமர் மோடியின் முகத்தில் நம்பிக்கை சுத்தமாக இல்லை. | நேற்று முழுமையாக நம்பிக்கையுடன் இருந்தார்கள். |
| He sold our farmers. | அவர் நமது விவசாயிகளை விற்றுவிட்டார். | எல்லாவற்றையும் விற்றுவிட்டார்கள். |
| Today if Trump says Modi to jump, Modi jump. | இன்று டொனால்ட் ட்ரம்ப் சொன்னால் மோடி குதிக்கிறார் (ஆட்டுவிக்கிறார்). | மோடி எகிறுகிறார். விவசாயிகளின் பொருளாதாரம் அனைத்தையும் விற்றுவிட்டார். |
| He control him through the Epstein files. | ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ மூலமாக ட்ரம்ப் அவரை (மோடியை) கட்டுப்படுத்துகிறார். | அவர் யாரைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்?
|
