
தமிழகத்தில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நெல் அதிக அளவு பயிரிடப்படும் நிலையில் நடப்பு ஆண்டு காவிரி அணையில் இருந்து போதிய அளவு நீர் கிடைக்காததால் குருவை சாகுபடி வெகுவாக குறைந்தது. அதே சமயம் கர்நாடகாவில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு வரும் அரிசி மூட்டைகளின் எண்ணிக்கையும் சரிந்ததால் கர்நாடக பொன்னி மற்றும் மைசூர் பொன்னி போன்ற அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு நான்கு ரூபாய் வீதம் ஒரு மூட்டைக்கு 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசிகள் தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.