தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கும் போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில ஏதுவாக அரசு கல்வி கட்டணம் வழங்கி வருகின்றது. இந்த குழந்தைகளுக்கு உயர்கல்வி கட்டணத் தொகை அல்லது 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு அரசு முன்வந்துள்ள நிலையில் தேசிய ஆசிரியர் நல நிதியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக இந்த கட்டணம் வழங்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

அதே சமயம் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழில்நுட்ப கல்வி, பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு பயலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கு படிப்பு உதவி தொகை வழங்க விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.