தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்க ஊதியம் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அதற்கு அதிகமாக படித்திருந்தால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும். இளங்கலை, முதுகலை, கல்வியியல் என ஒவ்வொரு படிப்பிற்கும் ஊக்க ஊதியம் வழங்கப்படும். ஒருவேளை பணியில் சேர்த்த பிறகு ஆசிரியர்கள் உயர் கல்வி படிக்க விரும்பினால் அவர்கள் முறையாக அனுமதி பெற்ற பிறகு உயர்கல்வி படிக்க வேண்டும்.

ஒருவேளை அனுமதி பெறாமல் படித்தால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட மாட்டாது. இந்நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அவர் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஊக்க ஊதியம் பெற தகுதியான நபர்களின் பெயர்களை தயார் செய்து பட்டியலை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த பட்டியலின் அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.