
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு சார்பாக புதிதாக மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக ஊழியர்கள் தங்களுக்கான விடுமுறை, படங்கள் மற்றும் முன்பணங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதே சமயம் ஊதிய சீட்டு, வருமான வரி பிடித்தல் ஆகியவற்றிற்காகவும் இந்த மொபைல் செயலி மூலமாக தங்களுக்கான படிவத்தை ஊழியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பயண சலுகை மற்றும் பயணப்படி மாறுதல் ஆகியவற்றின் கோரிக்கைகளின் நிலையையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இந்த மொபைல் ஆப் மூலமாக ஊழியர்கள் மின் பதிவேற்றத்திற்கான திருத்தங்களையும் செய்யலாம். இந்த செயலி மூலமாக ஓய்வூதிய சீட்டு மற்றும் ஓய்வூதியம் பெறப்பட்ட விவரம் ஆகியவற்றுக்கான படிவம் 16 ஆகியவற்றை இதன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.