தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காமராஜர் பிறந்த நாளான வருகின்ற ஜூலை 15ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது.