தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாணவ மாணவிகளின் பாதுகாப்புக்காக அனைத்து வகை பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என தலைமை ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.

தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சூழல் மிகுந்த ஈரப்பதத்துடன் இருக்கும். எனவே அதன் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதாவது இருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.