தமிழகத்தில் மே 8-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் மொத்தமாக 8,03,385 மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 47 ஆயிரத்து 387 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் வருகின்ற மே 15ஆம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.