நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் நம்முடைய ரேஷன் கார்டுக்காக ஒதுக்கப்பட்ட உணவு பொருட்களை வேறு யாரும் பெற முடியாது. ஒவ்வொரு மாதமும் நாம் வாங்கிய பொருள்களுக்கான விவரம் மற்றும் ரசீது நம்முடைய மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும். அதே சமயம் ஓடிபி மற்றும் பிற விவரங்களுக்கு மொபைல் நம்பருக்கு தான் அனுப்பப்படும். ஏதாவது காரணங்களால் நமது மொபைல் எண்ணை மாற்ற வேண்டிய சூழ்நிலைகளில் இணையதளம் மூலமாக ரேஷன் கார்டில் புதிய மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்காக குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் புதிய மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் தேவை. பதிவு செய்யப்பட வேண்டிய மொபைல் எண் ஏற்கனவே வேறு ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது. நம்முடைய பகுதிக்கான வட்ட வழங்கல் அதிகாரி அலுவலகத்திற்கு சென்று இதற்கான படிவத்தை தேவையான ஆவணங்களோடு சமர்ப்பித்து பதிவு செய்யலாம். இல்லையென்றால் https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆவணங்களை சமர்ப்பித்த புதிய மொபைல் எண்ணை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.