
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அண்ணாமலை அவர்கள் பரபரப்பான ஆட்சி செய்ய விரும்புகிறார். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக எதிர்க்கட்சி இல்லை, பாஜக தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்கு அவர் முயற்சி செய்கிறார். அதனால் ஆளுங்கட்சியின் மீது அவ்வபோது குற்றச்சாட்டுகளை அடுக்கினால் தான் ஒரு எதிர்க்கட்சியாக செயல்படு முடியும் என்று அவர் நினைப்பதாக கூறினார்.
அவர் லண்டன் போய்விட்டு வந்த பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஏன் அவர் இப்படிப்பட்ட முடிவை எடுக்கிறார் மிகவும் வருத்தம் அளிக்கிறது. தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் அகிம்சை வழிப் போராட்டத்தை காந்தியைப் போல கையில் எடுக்கிறாரா என்பது தெரியவில்லை. உண்ணாநிலை அறப்போராட்டம் சரி, ஆனால் தன்னைத் தானே சௌக்கை மட்டும் சாட்டையால் அடித்துக் கொள்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று மறைமுகமாக சாட்டையடி போராட்டத்தை கிண்டலடித்துள்ளார்.