தனுஷ் இயக்கும் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தி படம் வரும் பிப்.17 ஆம் தேதியன்று திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இப்போது டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், தனுஷ் மீண்டும் புது படத்தினை இயக்குவார் என தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு விஷ்ணு விஷால் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக தனுஷ் இயக்கிய பா.பாண்டி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.