நடிகர் தனுஷ் உடன் சண்டை போட்டு ஆறு வருடங்கள் பேசாமல் இருந்ததாக நடிகர் ஜி.வி பிரகாஷ் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் மட்டும் தான் சினிமாவை தாண்டிய நட்பு அமையும். அப்படியான நல்ல நட்பு எனக்கும் தனுசுக்கும் உண்டு. நண்பர்கள் என்றால் சண்டை வருவது சகஜம் தான். இப்போது எல்லா பிரச்சனைகளும் சரியாகி விட்டது. பழையபடி நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.