நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட்டை தெலுங்கு பட இயக்குநர் வெங்கி குடுமுலா தற்போது அளித்துள்ளார். அதாவது, “ஜிவி பிரகாஷ் கேப்டன் மில்லர் படத்திற்காக இசையமைத்த “கில்லர் கில்லர்” என்ற பாடலை என்னிடம் போட்டுக் காண்பித்தார், அந்த பாடலை நான் கேட்டேன். மைண்ட் ப்ளோயிங் என்பது சிறிய வார்த்தை, அருமையாக உள்ளது.

மக்கள் இந்த பாடலை எப்படி வரவேற்பார்கள் என்பதை காண காத்திருக்கிறேன்” என்று கூறினார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.