தமிழக அரசு தற்போது அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது கர்ப்பிணிகளின் விவரத்தை பிக்மி என்ற தளத்தில் ஏற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கர்ப்பிணி பெண்கள் குழந்தை பிறப்புக்கு முந்தைய ரத்தக் கசிவு மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு போன்றவைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதை தடுக்கும் ‌ விதத்தில் கர்ப்பிணிகளின் விவரத்தை தனியார் மருத்துவமனைகள் PICME வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் தனியார் மருத்துவமனைகள் கர்ப்பிணிகளின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.