துருக்கி நாட்டின் செரிக் நகரில், தந்தை தவறுதலாக ஓட்டிச் சென்ற பிக்கப் வேன் மோதி, ஒன்றரை வயதுடைய பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. லெவென்ட் சாஹின் என்ற தந்தை தனது வீட்டின் அருகே வாகனத்தை ரிவர்ஸில் (Reversing) இயக்கத் தொடங்கியபோது, வாகனத்திற்குப் பின்னால் விளையாடிக் கொண்டிருந்த தனது ஒன்றரை வயது மகன் யாகூப் எமிர் சாஹின் மீது வாகனம் ஏறியுள்ளது.
குழந்தையின் சிறிய உயரம் காரணமாக ஓட்டுநர் இருக்கையில் இருந்த தந்தைக்குக் குழந்தை கண்ணில் படாததே இந்த கோர விபட்டுக்குக் காரணமாக அமைந்தது. உடனடியாக அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள கெபிஸ் அவசர மருத்துவ மையத்திற்கு விரைந்து கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தும், படுகாயமடைந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
🇹🇷 A dad in Antalya, Turkey, was just reversing his minibus in front of his own house and didn’t see his 1.5-year-old son standing behind it.
Little Yakup Emir didn’t make it.
Then you see the parents at the morgue, both of them collapsing when they have to take their baby’s…
— Mario Nawfal (@MarioNawfal) August 29, 2026
விபத்து நடந்த தருணம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், தனது கைகளாலேயே மகனின் உயிரைப் பறித்த குற்றவுணர்ச்சியிலும் துயரத்திலும் தந்தை லெவென்ட் சாஹின் நிலைகுலைந்து அழுத காட்சிகள் அனைவரையும் கண் கலங்கச் செய்துள்ளன.
