ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2025 மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் ஐபிஎல் நட்சத்திர ஏலத்தில் அணிகளால் கைவிடப்பட்ட இந்திய ஆல்ரவுண்டர் ஷரத்துல் தாக்கூர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் பயிற்சி பெறும் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதனால் லக்னோ அணியில்  ஷரத்துல் தாக்கூர் விரைவில் சேர்க்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது பல்வேறு வீரர்களின் காயத்தால் பாதிக்கப்பட்டது. அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர் யாதவ் காயம் காரணமாக சீசனின் முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை. இதே போல ஆல்ரவுண்டர் மிட்ஷால் மார்ஸும் காயம் காரணமாக பங்கேற்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் தான் லக்னோவா அணி ஆல்ரவுண்டர் ஷரத்துல் தாக்கூரை அணியில் எடுக்க முடிவு செய்துள்ளது. ஷரத்துல் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரராக இருந்தார். ஆனால் ஐபிஎல் மெகா நட்சத்திர ஏலத்தில் அவரை யாருமே எடுக்கவில்லை. சிஎஸ்கே அணியும் அவரை கை கழுவியது .ஆனால் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் தான் யார் என்று நிரூபித்தார். ரஞ்சிக்கோப்பையில் மும்பை அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளரும் இவர்தான்.