உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தார்த் ராய் என்பவர், தனது சகோதரியின் திருமணத்தை மனிதாபிமானத்தின் ஒரு மிகச்சிறந்த அடையாளமாக மாற்றியுள்ளார். ஆடம்பரமான விஐபி விருந்தினர்களுக்குப் பதிலாக, நகரின் வீதிகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களையும் யாசகம் பெறுபவர்களையும் தனது சகோதரியின் திருமணத்திற்கு ‘சிறப்பு விருந்தினர்களாக’ அவர் அழைத்துள்ளார்.
மேலும் அவர்களைக் கௌரவிக்கும் விதமாகத் தனி வாகனங்கள் மூலம் திருமண மண்டபத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ததோடு, மற்ற விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்ட அதே உயர்தர உணவுகளையும் அவர்களுக்கு மிகுந்த மரியாதையுடன் வழங்கியுள்ளார். திருமண விழாவில் உணவளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களைக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்து மகிழ்வித்த சித்தார்த் ராய், அவர்கள் வீடு திரும்பும்போது பல்வேறு பரிசுகளையும் வழங்கியுள்ளார்.
यूपी – जिला गाजीपुर के सिद्धार्थ राय ने अपनी बहन की शादी में स्पेशल मेहमान बुलाए। वो थे भीख मांगकर गुजारा करने वाले। गाड़ियों से इन्हें शादी में लाया गया, लजीज व्यंजन परोसे गए, फिर विदाई भी दी गई। pic.twitter.com/MJkvxtNqZL
— Sachin Gupta (@SachinGuptaUP) December 22, 2025
“>
இந்நிலையில் “யாரு மற்றவர்களின் ஆசிர்வாதம் மிகப்பெரியது” என்று சித்தார்த் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். வாழ்வில் முதல்முறையாக இத்தகைய மரியாதையைத் திருமண விழாவில் பெற்றதாக அங்கிருந்த முதியவர் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரின் இந்தச் செயல், மகிழ்ச்சி என்பது பகிர்வதில்தான் இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
