நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவில் ரோகினி அய்யர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர். அவர்கள் தங்குவதற்கு இடமில்லை என கூறி ரோஹிணி அய்யரின் வீட்டில் தங்கியுள்ளனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது இருவரும் காணாமல் போய்விட்டனர்.

மேலும் வீட்டிலிருந்து 20 பவுன் தங்க நகைகள், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பணம் ஆகியவையும் திருடு போயிருந்தது. இதுகுறித்து ரோஹிணி அய்யர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த சுப்புலட்சுமி(60), அவரது மருமகன் வேலாயுதம்(36) ஆகியோர் வீட்டில் திருடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து 13 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.