இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்க நட்சத்திரமாகவும், ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகவும் வலம் வரும் ரிங்கு சிங், தனது அதிரடி ஆட்டத்தால் மட்டுமல்லாமல், தனது கனிவான குணத்தாலும் மீண்டும் ஒருமுறை அனைவரது மனங்களையும் வென்றுள்ளார். ஐபிஎல் 2026 போட்டியின் போது மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரிங்கு சிங்கிடம், கேலரியில் இருந்த ரசிகர்கள் தாகத்தில் தண்ணீர் கேட்டுள்ளனர்.

​சற்றும் யோசிக்காமல், தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அந்த ரசிகர்களிடம் வழங்கினார். ஒரு சர்வதேச நட்சத்திர வீரராக இருந்தும், ரசிகர்களுடன் அவர் காட்டிய இந்த நெருக்கமும் எளிமையும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. “ஆட்ட நாயகன் விருதுகளை விட, மக்களின் அன்பை பெறுவது தான் முக்கியம்” என்பதை ரிங்கு சிங் மீண்டும் நிரூபித்துள்ளார். ஏற்கனவே தனது சிக்ஸர்களால் ரசிகர்களை கட்டிப்போட்ட ரிங்கு, இப்போது தனது இந்த அன்பான செயலால் ‘ரியல் ஹீரோ’ என அனைவராலும் புகழப்பட்டு வருகிறார்.