கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எம். வெள்ளாளப்பட்டி கிராமத்தில் சின்னமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சீதா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அதன் உரிமையாளர் பிரகாஷ் என்பவருக்கும் சீதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று பிறந்தது‌. இதை கேள்விப்பட்ட சின்னமுத்து தன்னுடைய உறவினர்களுடன் சென்று சீதா உடன் தகராறு செய்ததோடு தன்னுடன் வாழ வருமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு சீதா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பிரகாஷ் சம்பவ இடத்திற்கு தன் ஆட்களுடன் வந்துள்ளார். அவர் சின்னமுத்து மற்றும் அவரின் உறவினர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அவர்கள் அங்கிருந்து பயந்து ஓடிவிட்டனர். இதனால்  ஆத்திரமடைந்த சின்னமுத்து சீதாவை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரு தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரகாஷ் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சின்னமுத்துவை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள்.