சமூக ஊடக ரீலை வைரலாக்கும் முயற்சியில் தீ ஸ்டண்ட் செய்து பெரும் விபத்தில் சிக்கிய வங்கதேச உள்ளடக்க உருவாக்குபவர் அல் அமீன் (40), தற்போது டாக்காவின் BIRDEM மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கௌரிபூரைச் சேர்ந்த அல் அமீன், வெள்ளிக்கிழமை தரியாபூர் செங்கல் வயல் அருகிலுள்ள ஒரு செயற்கை நீர்த்தேக்கத்தில் தீ காட்சியை படமாக்க முயன்றபோது இந்த பரிதாபகரமான சம்பவம் ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவிலும், அவர் அரை நிர்வாணமாக காட்சியளிக்கிறார்.

சாட்சிகளின் தகவலின்படி, நீரின் மேற்பரப்பில் பெட்ரோலை ஊற்றி, அதனைப் பற்றவைத்து ஒரு “பார்வை ஈர்க்கும்” காட்சி உருவாக்க அல் அமீன் முயன்றுள்ளார். ஆனால், அதிக அளவு பெட்ரோல் பயன்படுத்தப்பட்டதால், தீப்பிளம்புகள் சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து எழுந்து, அவரை முழுவதும் சூழ்ந்துவிட்டன. பீதியில் நீர்த்தேக்கத்தில் குதித்த அமீன் – 35%–40% தீக்காயம் பரவலாகப் பகிரப்படும் வீடியோவில், தீப்பற்றி எரிந்த நிலையில் ஓடிக் கொண்டே நீர்த்தேக்கத்தில் குதித்து தீயை அணைக்க முயலும் அல் அமீன் காணப்படுகிறார்.

எனினும், உடலின் பெரும்பகுதி ஏற்கனவே தீக்காயம் அடைந்திருந்த நிலையில், அவருக்கு 35–40% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். உள்ளூர்வாசிகள் அவரை உடனடியாக மீட்டு மைமென்சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே நிலை மோசமடைந்ததால், மேம்பட்ட சிகிச்சைக்காக டாக்காவில் உள்ள BIRDEM மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (CCU) தொடர்ந்த கண்காணிப்பில் உள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Khobor (@thekhobor)

அல் அமீன் குறித்து பேசும் உள்ளடக்க ஆய்வாளர் ஆசாத் ஹொசைன் ஜோனி,
“அவரை நிலைப்படுத்த மருத்துவர்கள் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர்”
என்றார். அவரது நீண்டநாள் உதவியாளர் சுபல் சந்திர அதிகாரி, “நாடு முழுவதும் உள்ள மக்கள் அவரின் குணமடைவிற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்தச் சம்பவம், சமூக ஊடக ரீல்கள் மற்றும் குறும்படங்களுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் நடக்கும் ஆபத்தான ஸ்டண்ட்களின் அதிகரிப்பு மீதான கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் சமூக ஊடக புகழுக்காக உயிரையே பணயம் வைக்கும் இத்தகைய செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்று வருகிறது.