அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் ஆதரவு முற்றிலும் குறையக்கூடும் என்ற அச்சம் அந்நாட்டு ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரான் விமானங்களை மறைத்து வைத்தது போன்ற செயல்களால் அமெரிக்கா பாகிஸ்தான் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அமெரிக்கா தங்களைக் கைவிட்டுவிடுமோ என்ற பயத்தில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், தனது ராணுவத்திற்காக கூடுதலாக 100 பில்லியன் 100 ரூபாய் நிதியைத் திரட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, 2026-27 நிதியாண்டில் பாகிஸ்தானின் பாதுகாப்பு பட்ஜெட் 2.66 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது, இது நடப்பு ஆண்டை விட 100 பில்லியன் ரூபாய் அதிகமாகும்.
மேலும் மக்களுக்கு அன்றாட உணவுக்கே வழியில்லாத சூழ்நிலையிலும், இந்த கூடுதல் ராணுவ நிதியைத் திரட்டுவதற்காக பாகிஸ்தான் அரசு தன் நாட்டு மக்கள் மீது கடுமையான வரிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த பெருந்தொகையான ராணுவ பட்ஜெட்டை அங்கீகரிப்பதற்காக, 2027 ஜூன் மாதத்திற்குள் அனைத்து அரசு கட்டணங்களையும் டிஜிட்டல் மயமாக்குவது மற்றும் ஊழல் நிறைந்த 10 முக்கிய நிறுவனங்களை தணிக்கை செய்வது போன்ற பல வாக்குறுதிகளை வழங்கி IMF-ஐ ஏமாற்ற பாகிஸ்தான் முயன்று வருகிறது.
