ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி மையங்கள் மீது 48 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடத்துவோம் என மிரட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது திடீரென 5 நாட்களுக்குத் தாக்குதல் இல்லை என அறிவித்திருப்பது உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், ட்ரம்ப்பின் இந்த ‘யு-டர்ன்’ முடிவை ஈரான் மிகக் கடுமையாக எள்ளி நகையாடியுள்ளது.
“ட்ரம்ப் எங்களின் வலிமையைப் பார்த்து பயந்து பின்வாங்கிவிட்டார்” என்றும், “ஈரானின் பதிலடி எப்படி இருக்கும் என்பது தெரிந்ததால்தான் அமெரிக்கா தனது முடிவை மாற்றிக்கொண்டது” என்றும் ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் யாருடைய மிரட்டலுக்கும் பணியப்போவதில்லை என்றும், தற்காப்புக்காக எதையும் செய்யத் துணிந்துள்ளதாகவும் ஈரான் மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது.
ட்ரம்ப்பின் இந்த 5 நாள் அவகாசத்தை ஒரு வாய்ப்பாகப் பார்க்காமல், அமெரிக்காவின் தோல்வியாகவே ஈரான் சித்தரித்து வருவது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
