தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் பிரபல இயக்குநரான கே.விஸ்வநாத்(92) உடல்நல குறைவு காரணமாக இன்று இறந்தார். இவருடைய இறப்புக்கு ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இதேபோன்று பாலிவுட் நடிகர் அனில் கபூர் தனது இரங்கல் செய்தியை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். மேலும் அவரது மறைவு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலத்தால் அழியாத திரைக் காவியங்கள் வாயிலாக இந்திய அளவில் மக்கள் மனம் எங்கும் நிறைந்துள்ள மகா கலைஞர் இயக்குநர் திரு.கலாதபஸ்வி விஸ்வநாத் மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

அதேபோல் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “கே. விஸ்வநாத் அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் என் இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.