இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. உலகின் பல்வேறு மூலைகளில் டைம் ட்ராவல் என்பது சாத்தியமா என்ற மர்மம் இன்றும் நிலவி வருகிறது. ஆனால் இன்று வரை அதன் உண்மை என்ன என்பதை யாராலும் தெளிவாக கண்டறிய முடியவில்லை. தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் நிஜமாக டைம் டிராவல் செய்யும் ஒரு பெண்ணை காண முடிகிறது. ஒரு நபர் தன்னுடைய வீட்டின் ஜன்னல் வழியாக வீடியோ ஒன்றை எடுத்துக் கொண்டிருந்தார். அந்த வீடியோவில் அதிர வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. சாலையோரம் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த பெண்ணின் கால்கள் உறைந்து நின்று விட்டது.

அந்தப் பெண் ஒரு சில நொடிகள் ஒரு கல்போல எங்கும் அசைையாமல் நிற்கின்றார். லேசான காற்று வீசிய பிறகு அவரது தலைமுடி அசையவில்லை. உடைகள் எதுவும் அசையாமல் அவர் அப்படியே நிற்கிறார். அந்தப் பெண் சிலை போல நிற்க பின்னால் நின்றவர் இந்த முழு காட்சியையும் தனது கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு திடீரென அந்த பெண் பழையபடி சாதாரணம் ஆகி விடுகிறார். இந்த முழு சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கண்ட மக்கள் பலரும் அந்தப் பெண் டைம் டிராவல் செய்து இருக்கிறார் என்று தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.