தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜய் அவர்கள் எழுச்சமிகு உரையாற்றி இருப்பார். அதில் தங்கள் கழகத்திற்கான எதிரிகள் யார் என்பதை தெளிவாக பேசி இருப்பார். அதில் ஒரு எதிரியாக பாஜகவினரையும் மற்றொரு எதிரியாக திமுகவினரையும் அவர் சுட்டிக் காட்டி இருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அந்த வீடியோ காட்சிகளை எடிட் செய்து இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இதற்கு மறு பதில் அளிக்கும் விதமாக திமுக தரப்பிலும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி வீடியோ ஒன்றில், ஸ்டாலின் அவர்கள் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அதில், திமுகவை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. சாதாரணமா சொல்றாங்க கழகம் இல்லாத தமிழ்நாடு என்று டேய் களவாணி பசங்களா உங்களிடம் ஒன்று கேட்கிறேன்

நீங்கள் மேடைகளில் தைரியமாக பேசக்கூடிய இந்த தெம்பையும், திராணியையும் உங்களுக்கு வழங்கியது இந்த திராவிட மண் என்பதை மறந்து விடாதீர்கள் என பேசும் வீடியோ தற்போது இணையத்தில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டு அது இணையத்தில் வைரலாகி வருகிறது.