
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரல் ஆகிறது. உலகின் எந்த மூலையில் சண்டை மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் நடந்தாலும் அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டு விடுகிறார்கள். ஒரு குற்றம் நடக்கும்போது அதனை தடுக்க நினைப்பவர்களை விட தற்போது அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம். ஏனெனில் பொது இடங்களில் சில குற்ற சம்பவங்கள் நடக்கும்போது பொதுமக்கள் அதனை தடுக்க முயலாமல் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
#अंबेडकरनगर: एक ही गर्लफ्रेंड के लिए जिगरी दोस्त आपस में भिड़े, बीच सड़क पर जमकर मारपीट। गाली-गलौज के साथ चले लात-घूंसे, पब्लिक तमाशा देखती रही। घटना का वीडियो हुआ वायरल। मामला अकबरपुर कोतवाली क्षेत्र के गांधी चौक, शहजादपुर का। @ambedkarnagrpol pic.twitter.com/xiQvhw0TBS
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) April 2, 2025
அந்த வகையில் கோத்வாலி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இரண்டு வாலிபர்கள் ஒரு பெண்ணை காதலித்துள்ளனர். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கும் நிலையில் ஒரே பெண்ணின் மீது காதல் வய்ப்பட்டனர். அந்தப் பெண்ணை யார் காதலிக்க வேண்டும் என்பது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் நடுரோட்டில் வைத்து ஒருவருக்கொருவர் தாக்கி சண்டை போட்டுக் கொண்டனர். இதனை அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த நிலையில் ஒருவர் கூட அதனை தடுக்க முயற்சி செய்யவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவை வைத்து போலீசார் அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.