தமிழகம் உட்பட தென்னிந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
டெண்டர் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் நடந்த சுமூகமான பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வேலைநிறுத்தம் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மீண்டும் டேங்கர் லாரிகள் இயங்கத் தொடங்கியுள்ளதால், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற கவலை நீங்கி நிலைமை சீரடைந்துள்ளது.
