தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமுகவின் ஆட்சி காலம் 4 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. வழக்கமான போட்டிகளை விட இந்த முறை நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் குதித்துள்ளார். அதனால் தற்போது தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இப்படியான நிலையில் கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 27 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரும். பாஜக பொதுவாகவே ஒரு விஷயத்தை கையில் எடுத்து விட்டால் அரை நூற்றாண்டு ஆனாலும் அந்த விஷயத்தை செய்து முடித்து விடும். தமிழகத்தில் இன்று மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கிடையாது. மக்களின் உயிர் மற்றும் உடமையை காத்தவர் பிரதமர் மோடி தான். இந்து மதத்தையும் இந்துக்களையும் அழிக்கத் துடிக்கும் ஒரு தீய சக்திக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக வந்ததை போல 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.