டெல்லி வசந்த் விஹார் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லி வசந்த் விஹார் மார்க்கெட்டில் சி.பிளாக் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருக்கும் கடைகள் மற்றும் வீடுகளுக்கும் இந்த தீ வேகமாக பரவுகிறது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ராட்சத கிரேன்கள் உதவியுடன் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அருகில் இருக்கும் வீடுகளில் வசிக்கும் பொதுமக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.