தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் மத்தியிலும் அச்சம் நிலவி வருவதால் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அதன் எதிரொளியாக எல்லையில் உள்ள தேனி, குமரி மற்றும் கோவை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளது. திருவாரூரில் உயிரிழந்த பயிற்சிப் பெண் மருத்துவருக்கு டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.