எலான் மஸ்க்  ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில், ட்விட்டர் நீலப்பறவை லோகோவை மாற்றி எக்ஸ் என்ற புதிய லோகோவை அறிமுகப்படுத்தினார். தற்போது அதிலும் சில மாற்றங்களை செய்து இறுதி வடிவம் கொடுத்துள்ளார். இவரது நடவடிக்கைகளுக்கு பல விமர்சனங்கள் வந்தாலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் மனதில் நினைத்ததை செய்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து ட்விட்டரில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ட்விட்டர் தளத்தில் மெசேஜிங் தவிர்த்து, ஹோம் ஃபீட் பிரிவில் தான் அதிக கவனம் செலுத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து, அரிதான நடவடிக்கையாக மெசேஜிங் வசதி வழங்கப்பட்டது. தற்போது, புதிதாக ஆடியோ, வீடியோ கால் பேசுவதற்கான வசதி வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வந்த நிலையில், விரைவில் அறிமுகமாக உள்ளது.