ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் பயனர்கள் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது 99 ரூபாய்க்கு அன்லிமிடட் பயன்படுத்தும் டேட்டா சேவையை ஏர்டெல் இண்டர்நெட் அறிமுகம் செய்துள்ளது. இன்றைய தேதிக்கான உங்களது டேட்டா சேவை தீர்ந்துவிட்டால் நீங்கள் 99 கொடுத்து அன்லிமிடட் சேவையை பெறலாம். இதன் வேலிடிட்டி ஒரு நாள் மட்டுமே. ஆனால் அந்த ஒருநாளில் எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அம்சம் பலரை கவர்ந்துள்ளது.