கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்து துறை ஊழியர் ஒருவரை டீக்கடைக்காரர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் தன்னுடைய நண்பருடன் பேருந்தை நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் டீ நன்றாக இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. அதாவது டீக்கடையில் தன்னுடைய நண்பரிடம் டீ நன்றாக இல்லை. வேறு ஒரு கடையில் குடிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் அந்த கடையில் இருந்த ஒருவர் கோபத்தில் அரசு பேருந்து ஓட்டுநரின் மண்டையை மரக்கட்டையால் அடித்து உடைத்தார். இதில் அவருக்கு ரத்தம் வந்த நிலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் அந்த இடத்தில் பொதுமக்கள் கூடி அந்த கடைக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை காணலாம். மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.