பிப்ரவரி 15-ம் தேதி நடந்த இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் உலா வருகின்றன. அதில் லண்டனில் ஒரே அறையில் வசிக்கும் (Flatmates) இந்தியா மற்றும் பாகிஸ்தான் வாலிபர்களின் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியா ஜெயித்த சந்தோஷத்தில் இந்திய இளைஞர் கிச்சனுக்குள் நுழைந்து பயங்கரமாகச் சிரிக்க, அங்கு பாகிஸ்தான் வாலிபர் சோகமாக சப்பாத்தி சுட்டுக் கொண்டிருக்கிறார்.
”பாகிஸ்தான் தோத்துடுச்சு, ஆனா இந்தியனோட ஒரே ரூம்ல தங்கியிருந்தா இதான் நிலைமை” என அந்த பாகிஸ்தான் இளைஞர் ஜாலியாகப் புலம்பும் காட்சி நெட்டிசன்களைச் சிரிக்க வைத்துள்ளது. “போட்டியால் பிரிந்தாலும், வாடகையால் இணைந்தவர்கள்” (United by rent) என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, இரு நாட்டு மக்களிடையேயும் அன்பைப் பரப்பி வருகிறது. 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்த இந்த வீடியோவில், அந்த பாகிஸ்தான் இளைஞரின் சப்பாத்தி சுடும் திறமையையும் பலர் பாராட்டி வருகின்றனர்.
