டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியைப் புறக்கணிப்பது குறித்து பாகிஸ்தான் அணி மீது எழும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், மைதானத்திற்கு வெளியே இருந்து வரும் தேவையற்ற கருத்துகளையும் விமர்சனங்களையும் தாங்கள் கண்டு கொள்வதில்லை என்றும், அணியின் கவனத்தைச் சிதறவிடாமல் இருக்க இதுவே சிறந்த வழி என்றும் தெரிவித்தார்.
மேலும், ஆசியக் கோப்பையின் போது இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தது போன்ற நிகழ்வுகள் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற செயல்கள் விளையாட்டிற்கு ஆரோக்கியமானவை அல்ல என்று கூறினார்.
இந்நிலையில் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் முன்மாதிரிகளாகத் திகழ்வதால், களத்தில் கண்ணியமான முறையில் நடந்துகொள்வது அவசியம் என்றும், தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்து விளையாட்டில் கவனம் செலுத்துவதே தங்களது இலக்கு என்றும் சல்மான் ஆகா அந்தப் பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.
