2026 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தனது அதிரடியான புதிய தோற்றத்தால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
இதனால் ஒவ்வொரு முக்கிய தொடருக்கு முன்பும் தனது சிகை அலங்காரத்தை மாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ள பாண்ட்யா, இம்முறை தனது முடிக்கு ‘வெள்ளை பிளாண்ட்’ அல்லது சில்வர் நிறத்தில் வண்ணம் பூசி, ஒரு மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறியுள்ளார்.
இந்த புதிய ஹேர்ஸ்டைல் மற்றும் லேசான தாடியுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளபக்கங்களில் பகிர்ந்துள்ள நிலையில், “பார்க்கவே மிகவும் பிரஷ்ஷாக இருக்கிறார்” என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மைதானத்திற்கு வெளியே தனது ஸ்டைலால் கவனத்தை ஈர்க்கும் பாண்ட்யா, மைதானத்திற்குள் தனது ஆட்டத்திறனிலும் மிரட்டி வருகிறார்.
மேலும் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் வெறும் 10 பந்துகளில் 30 ரன்கள் குவித்து, தனது பழைய அதிரடி ஃபார்மிற்கு திரும்பியதை உறுதி செய்துள்ளார். சூர்யகுமார் யாதவ் தலைமையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
