அசாம் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற மனாஸ் தேசிய பூங்காவில், சுற்றுலா பயணிகள் சென்ற சஃபாரி ஜீப் ஒன்றை காட்டு காண்டாமிருகம் ஒன்று ஆக்ரோஷமாக தாக்கிய நெஞ்சை பதறவைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பூங்காவின் பன்ஸ்பாரி பகுதியில் டூரிஸ்ட்கள் ஜீப்பில் நின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்து வந்த காண்டாமிருகம், தனது பலத்த கொம்புகளால் ஜீப்பை முட்டித் தள்ளியது. ஜீப் பயங்கரமாக குலுங்கியதால் உள்ளே இருந்த பயணிகள் மரண பயத்தில் அலறினர்.
Close shave for tourist in Manas National Park when a rhino almost lifted a safari jeep by its horn. The drive however managed to move out safely. The incident too place in Bansbari range of the national park of Assam. #rhino #rhinosafari pic.twitter.com/P5PtQd3tvb
— Preeti Sompura (@sompura_preeti) May 17, 2026
சரியான நேரத்தில் சுதாரித்துக் கொண்ட ஜீப் டிரைவர், சாதுரியமாக வண்டியை அசுர வேகத்தில் பின்னோக்கி இயக்கியதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, பயணிகள் அனைவரும் காயமின்றி நூலிழையில் உயிர் தப்பினர். இதே பூங்காவில் கடந்த ஆண்டும் இதே போன்றதொரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ள நிலையில், வனவிலங்கு சஃபாரிகளின் போது வாகனங்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே பாதுகாப்பான தூரத்தை பராமரிப்பது மற்றும் கடுமையான பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவது குறித்து வனத்துறையினர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
