
உத்திரப் பிரதேச மாநிலம் பனாரஸ் நகரில் ரயில் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ரயில்வே கிராசிங்கில் கார், பைக் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இதனால் அவ்வழியாக சென்ற ரயில் சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தது. இந்த வீடியோவை ஞாயிற்றுக்கிழமை @erbmjha ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த இணையாசிகளோ டிராபிக்கில் ரயில் நிற்கும் சம்பவத்தை இதுவரை பார்த்ததில்லை என வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
India is not for the beginners
pic.twitter.com/sSFLZWS3BK
— BALA (@erbmjha) August 13, 2023