அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் தேர்தல் போட்டியில் நின்றால் அவர்தான் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் பேசுகையில் அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் நாடு முழுவதிலும் பிரச்சாரம் செய்து வருகிறேன். டொனால்ட் டிரம்ப் அதிபர் ஆவது பற்றி நாம் பயம் கொள்ள வேண்டும்.

அந்த பயத்திற்கு எதிராக போராடவும் வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பயம் ஏற்பட்டால் அமைதியாக போர்த்திக் கொண்டு படுத்திருப்போமா? இல்லை. நம்மால் அது முடியாது எனவே ஜனநாயக கட்சி மீண்டும் போராட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன் என பேசியுள்ளார்.